கருப்பு பெட்டி
விமான கருப்புப் பெட்டி (Black box/flight recorder) விமானத்தினுள் தகவல் சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவியாகும்.
விமானம் விபத்திற்குள்ளாகும் போது அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு/ஆராய்வதற்கு இக்கருவி பெரிதும் உதவும்
விமானத்தில் உண்மையில் இரண்டு கருப்பு பெட்டிகள் உள்ளன
1) cockpit voice recorder
2) flight data recorder
கருப்பு பெட்டி விமானத்தின் வால் பகுதியில் அமைந்திருக்கும்.
கருப்பு பெட்டியில் உள்ள CVR (Cockpit voice recorder) என அழைக்கப்படும் கருவி குறைந்தது இரண்டு மணி நேர தகவலை சேமித்து வைத்திருக்க வேண்டும்
மற்றொன்று FDR என அழைக்கப்படும் கருவி குறைந்தது 25 மணி நேர விமான தகவல்களை சேமித்து வைத்திருக்க வேண்டும்.
கருப்பு பெட்டியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஆஸ்திரேலியாவின் இளம் விஞ்ஞானி DR.DAVID WARREN
மார்ச் 17 1953 கருப்பு பெட்டி பிறந்தது மற்றும் 1957 இல் உற்பத்தி செய்யப்பட்டது
சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட கருப்பு பெட்டி விபத்துக்குள்ளான பகுதிகளில் எளிதாக கண்டறிய முடியும்
விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும், இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம். இதில் பதிவாகியுள்ள தரவுகளை வைத்து விமான விபத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ளமுடியும்.
இந்த தொழில்நுட்பம் அன்மையில் உள்ள அனைத்து விமானத்திலும் பொருத்தப்பட்டுள்ளது








No comments:
Post a Comment