Saturday, July 7, 2018

கற்பித்தலின் கலை

கற்றல் என்பது ஒரு மனிதன் தன் வாழ்வில் அன்றாட செய்ய கூடிய ஒரு செயல்களில் ஒன்று கற்றல் மனிதனை சிறப்பாக மாற்றுவதுடன்,அவனது சிறப்பு அம்சங்களையும்,திறமைகளையும் முழுமையாக வெளிபடுத்தவும் கற்றல் மிகவும் உதவுகிறது. தன் பிறப்பிற்கு முன்பே கற்றலை துவங்குகிறான் தன் இறப்பின் கடைசி முச்சிவறை அவன் கற்பிக்கிறான்.
சரி கற்றல் என்றால் என்ன?  மனிதன் எவ்வாறு கற்பிக்கிறான் ? எங்கே கற்றுக் கொள்கிறான் என இத்தனை கேள்விக்கும் இக்கட்டுரை உங்களுக்கு பதில் அளிக்கும். இதைப் படிப்பதன் மூலம் ஒருவன் கற்றலின் கலையை முழுமையாக அறிகிறான் தான் எவ்வாறு கற்றல் இவை அனைத்தையும் பெற முடியும் என்பதையும் அறிகிறான்.
கற்றல் என்பது பலர் கூறுவது போல பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கற்பது அல்ல அவன் செய்யும் செயலும் அவனை சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் அவளுக்கு கற்றுக் கொடுக்கிறது.வாழ்வில் ஒவ்வொரு நெறியிலும்  பல சந்தர்ப்பத்திலும் அவனுக்கு அதை தருகிறது
 சரி எவ்வாறு கற்பது? கற்றல்  நான்கு வகையாக பிரிக்கலாம்
1 ஒளி
2 ஒலி
3 படித்தல் அல்லது எழுதுதல்
4 செயல்
இவை நான்கு வகைகளில் நீங்கள் எவ்வாறு கற்றுக் கொள்கிறீர்கள் என்று முதலில் உணர வேண்டும் இவ்வுணரலே    ஒருவனை சிறப்பு மிக்கவனாக வலிமையானவன் ஆக மாற்றும்
 நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் சரி எதைப் படிக்க நினைத்தாலும் சரி எந்த மொழியை படிக்க நினைத்தாலும்  இவை நான்கையும் புரிந்தால் மட்டுமே முடியும்
 சரி இதில் நீங்கள் எந்த வகை?  எது முழியுமாக நான் ஒரு விஷயத்தை எளிதில் கற்றுக் கொள்ள முடியும் ஒலி-ஒளி படித்தல் செயல்??
 இவை நான்கு வகையும் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது.எவ்வாறு என்றால்  ஒரு சிலருக்கு புத்தகம் படிப்பது பிடிக்கும், சிலருக்கு பாடல்கள் கேட்பது பிடிக்கும்,  சிலருக்கு நடனம் ஆடுவது பிடிக்கும்,  ஆனால் புத்தகம் படிப்பவர்களுக்கு நடனமாட பிடிக்காது, நடனமாடுபவர் க்கு ஒரு புத்தகத்தை உட்கார்ந்து படிக்க புடிக்காது.இவ் வித்தியாசத்தை தெரிந்தால் போதும்  நாம் எவ்வாறு கருத வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து விடலாம்.

நீங்கள் ஒளி வடிவத்தில் கற்பவரா  அல்ல படித்தலில், அல்லது செயல் முழியுமாக கற்பவரா, இல்லை இதில் ஒன்று அல்லது இரண்டு முறையையும்  சேர்ந்து கற்பவர?  யார் நீங்கள்?
நீங்கள் ஒரு மொழியோ அல்லது  புத்தகத்தையோ எதுவாக இருந்தாலும் சரி, இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இம் முறையை நீங்கள்  பயன்படுத்தினால் மட்டுமே உங்களால் ஒரு விஷயத்தை  முழுமையாக கற்றுத் தேற முடியும்,  அல்லது உங்கள் குழந்தைகள் இவ்வாறு கற்றால் அவர்களுக்கு புரியும் என்பதை தெரிந்து   கொள்ள முடியும்
 எவ்வாறு தெரிந்துகொள்வது?
 

1)படித்தல் மற்றும் எழுதுதல்:
       இவர்களுக்கு படிப்பது மிகவும் பிடிக்கும்  அவர்கள் அதை படிக்கும் போதோ எழுதும் போது மிகவும் கவனமாக இருப்பார்கள். இவ்வகையானவர்கள் பிற்காலத்தில் எழுத்தாளராகவோ  அல்லது மேதையாக மாறுவார்கள் இத்தகைய பண்பு உடையவர்களுக்கு பள்ளி கல்லூரிகள் செல்ல மிக  ஆர்வத்துடன் இருப்பார்கள்  அவர்களுக்கு தான் தற்போது இருக்கும்  பள்ளிகளும் கல்லூரிகளும்  பெரும் உதவியாக இருக்கும்  ஏனென்றால்  அங்கே அவர்களுக்கு புத்தகத்தை மட்டும் தான்  கொடுத்து படிக்கச் சொல்கிறார்கள்
2 ஒளி:
   
 ஒளி மூலியமாக கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்  அவர்களுக்கு ஓவியங்கள் திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும்  ஆனால் அவர்களால் ஒரு புத்தகத்தை அரை மணிநேரம் உட்கார்ந்து படிக்க பிடிக்காது  இத்தகையவர்கள் பிற்காலத்தில் சினிமா இயக்குனராக  அல்லது ஓவியராகவும் மாறுவார்கள் அவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ்  வீடியோ projection பெரும்பாலும் உபயோகமாக  இருக்கும்  இவை மூலம் அவர்கள் எளிதில் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்கிறார்கள்
3 ஒலி:
   
  ஆடியோ மூலமாக கற்றுக் கொள்பவர்கள்,  அவர்கள் இசையில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். Home work  செய்யும் போதோ அல்லது வேலை செய்யும் போதும் பாடல்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்  அவர்களுக்கு உதவி செய்வது மிகவும் பிடிக்கும் அவர்கள் பிற்காலத்தில் பெரிய பேச்சாளர்களாக மாறுவார்கள்  இத்தகையவர்களுக்கு மிகவும் உதவும் வகையில்  பல ஆடியோக்கள் யூடியூபிலும் இன்டர்நெட்டிலும் இருக்கிறது  இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  இம்முறையை பயன்படுத்தி அவர்கள் அதை சுலபமாக கற்றுக் கொள்ளலாம் எடுத்துக்காட்டு நீங்கள் குழந்தையாக இருக்கும்போது  பேச எப்படி கற்றுக் கொண்டீர்கள் என்று நினைத்து பாருங்கள்.

4  செயல் :
          
              செயல் முழியுமாக கற்றுக் கொள்ள  விரும்புவார்கள்  அவர்களுக்கு புத்தகத்தை பார்த்தாலும் படித்தாலும் புரியாது  செயல் மூலியமாக கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்  அவர்களுக்கு நடனமாட மிகவும் பிடிக்கும்  பிற்காலத்தில் அவர்கள் சிறந்த நடன ஆசிரியராக மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது,இவை எடுத்துக்காட்டிற்கு இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் 
நாம் சிறு வயதில் நிறைய கார் மோட்டார் களையும்  பல டிவி  ரேடியோ பிரித்துப் பார்த்து அதை  ரிப்பேர் செய்து இருக்கிறோம் அல்லவா,  அதை செய்யும்போது  ஒரு ஆர்வம் நம்மில் தெரிகிறது.இது நம்மில் இருக்கும் ஒரு  திறன் தானே  இதை வைத்து நாம் கற்றுக்கொள்ள விரும்பும் விஷயத்தை  சுலபமாக  கற்றுத் தேர்ந்து விடலாம்  எடுத்துக்காட்டு  சிறுவயதில் நாம் எப்படி சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டோம்  புத்தகத்தைப் படித்த அல்லது  அதை நாம் செயலாக செய்யும்போத?  யோசித்துப் பாருங்கள்
                   
இவை நான்கு கற்பித்தல் முறையும்  முன்பு சொன்னது போல ஒருவருக்கொருவர் வேறுபட்டிருக்கும்,  அல்லது ஒரு சிலர்  இந்த நான்கு முறைகளில் ஒன்று அல்லது இரண்டு  முறைகளையும் பயன்படுத்தி கற்றுக் கொள்ள விரும்புவார்கள்
அது என்னவென்று தெரிந்து கொண்டு  நாம் ஒரு விஷயத்தை  கற்றுக்கொண்டால்  அது நமக்கு வாழ்வில் பெரும் உதவியாக இருக்கும்  இதன் மூலமாக நாம் அனைத்தையும் சுலபமாக கற்றுக் கொள்ள முடியும்
பல பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு புத்தகத்தை மட்டுமே கொடுத்து படிக்கச் சொல்கிறார்கள்  இது  எல்லா மாணவர்களுக்கும்  செயல்படும்  என்பதை நாம் சொல்ல முடியாது,   (மேலே கூறியது போல)  ஒவ்வொரு மாணவனின் திறன் அறிந்து அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதே  ஆசிரியர்களுக்கு கடமையாகும்,
அதற்கு என்று நான் புத்தகத்தைப் படிப்பது தவறு என்று கூற மாட்டேன், அவ்வாறு படித்தால் அவர்கள் அதை முழுமையாக கற்றுக் கொள்ள மாட்டார்கள்  என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்,
பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஒரு புத்தகத்தை கொடுத்து படிக்க மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார்கள்  ஆனால் எவ்வாறு கற்றுக்கொள்ள வேண்டும்  என்பதை யாரும்  சொல்லித் தருவதில்லை மீனைப் பிடித்து கையில் கொடுப்பதைவிட  மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதுதான் சிறந்தது

எனவே ஆசிரியர்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு புரியும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு கற்றுக் கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொண்டு கட்டுரையை முடிக்கிறேன்



 

2 comments:

The Lifelong Journey of Learning Embracing Growth and Discovery

Introduction: Learning is an inherent aspect of the human experience, a continuous journey that begins at birth and extends throughout our l...