மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் நாம் எங்கே சென்றாலும் இந்த வாக்கியத்தை காணமுடியும் பள்ளிகளிலும் கல்லூரி சுவர்களிலும் பல ஓவியங்களாகவும் வரைந்தும் எழுதியும் வைத்திருப்பார்கள் பல பொது இடங்களிலும் பஸ் ஸ்டாப் ரயில் நிலையத்தில் கூட இவ்வாக்கியத்தை நாம் காண முடியும் மற்றும் பல விழிப்புணர்வு படங்களும் எடுக்கப்பட்டிருக்கும் இவற்றைப் பற்றி சிறு குறிப்பை நாம் காண்போம்
பல சமூக கூடங்கள் மற்றும் பிரபல நடிகர்கள் நடிகைகள் மரத்தை வளர்ப்பது பற்றியும் அதன் பயன்களையும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பின்னர் சிலர் மரக்கன்றுகளை நடுவதும் அதை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் சில பிரபலங்கள் நான் பல லட்சம் மரங்களை நட்டு இருக்கிறேன் என்பதை பெருமையாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்
இவர்களுக்கு நான் கேட்கும் ஒரு கேள்வி?
நீங்கள் பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறீர்கள் அல்லவா அதில் எத்தனை கன்றுகள் மரங்களாக மாறி இருக்கிறது என்று உங்களால் கூற முடியுமா????
இந்தக் கேள்வி அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் தான், நாம் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது மரக்கன்றுகளை நட்டு இருப்போம், அதில் எத்தனை மரங்களாக மாறுகின்றன? எத்தனை மரங்கள் இன்றும் இருக்கிறது என்று உங்களால் கூற முடியுமா?? சற்று சிந்தியுங்கள் நாம் மரத்தை நட்டு வைத்தோமா இல்லை வளர்த்தோம், மரத்தை நடுவதற்கு மரம் வளர்ப்பதற்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது, நாம் பெரும்பாலும் மரத்தை நட்டு தான் வைக்கிறோம்
சிலர் ஒரு கோடி இரண்டு கோடி என்று மரக்கன்றுகளை நட்டு வைத்து விட்டு அதை பெருமையாகவும் கின்னஸ் சாதனையாகவும் செய்கின்றனர் இதை என்னவென்று சொல்வது எனக்கு தெரியவில்லை மரத்தை நடுவது பெருமையா இல்லை மரத்தை வளர்ப்பது பெருமையா
இவை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அரசாங்கங்களும் கார்ப்பரேட்டுகளும் ரோடு போடுவதற்காகவும் மற்றும் காஸ்மெட்டிக் பொருட்களையும் பேப்பர்களையும் தயாரிப்பதற்காக மரங்களை வெட்டுகின்றனர்
இவை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அரசாங்கங்களும் கார்ப்பரேட்டுகளும் ரோடு போடுவதற்காகவும் மற்றும் காஸ்மெட்டிக் பொருட்களையும் பேப்பர்களையும் தயாரிப்பதற்காக மரங்களை வெட்டுகின்றனர்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பதற்கு பதிலாக மரத்தை வெட்டாதீர்கள் என்ற விழிப்புணர்வை பரப்புமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
மரம் நம் நாட்டின் வரம்



No comments:
Post a Comment